பழையதை மறக்காத மேகன்: தோழிக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நியூஸிலாந்தில் தனது காதல் கணவருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி மேகன், அவ்வளவு கூட்டத்திலும் தனது இன்ஸ்டாகிராம் தோழி ஒருவரை அடையாளம் கண்டு அவரைக் கட்டியணைத்து அவருக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.

இளவரசர் ஹரியை மணக்கும் முன் Hannah Sergel (20), மேகனுடன் இன்ஸ்டாகிராமில் செய்திகளை பகிர்ந்து கொள்வது வழக்கம்.

ஹரியுடனான நிச்சயதார்த்தத்திற்குப்பின் மேகன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி விட்டார்.

இந்நிலையில் நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேகனைக் காண்பதற்காக வந்த Hannah. ஒரு அட்டையில் நான் இன்ஸ்டாகிராமிலிருந்து Hannah என்று எழுதி வைத்துக் கொண்டு கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தார்.

தற்செயலாக அதை கவனித்த மேகனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, ஓடோடிச் சென்று Hannahவை அணைத்துக் கொண்டார் மேகன்.

தான் கல்வி கற்கும் காலத்தில் உடல் நலமின்றி கஷ்டப்படும்போது மேகன் தனக்கு ஆறுதல் கூறி கல்வியை விடக்கூடாது என உற்சாகப்படுத்தி வீடியோ ஒன்றை அனுப்பியதை நினைவு கூறும் Hannah, இளவரசியான பின்னரும் தன்னை மறக்காமல் அடையாளம் கண்டு கொண்டதோடு, அவர் தன்னை கட்டியணைத்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers