8 மாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய தம்பதி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து வெளியில் எடுக்கப்பட்ட குழந்தையின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த சவன்னா கிரேவ்விண்ட் என்ற 22 வயது கர்ப்பிணி பெண், தன்னுடைய மேல்வீட்டில் இருக்கும் பெண்ணை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவருடைய கணவர் ஆஷ்டன் மத்தேனி, மேல் வீட்டிற்கு சென்று பார்த்த போது, சவன்னா அப்பொழுதே வீடு திரும்பிவிட்டார் என கூறியிருக்கிறார்.

இதனையடுத்து ஆஷ்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து மேல் வீட்டை சேர்ந்த ப்ரூக்கிடம் விசாரித்தனர். தேடுதல் வேட்டை நடத்த அனுமதி பெறாததால், ப்ரூக் கூறியதை கேட்டு கொண்டு பொலிஸார் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதியன்று வடக்கு டகோட்டா பகுதியில் உள்ள நதி அருகே சவன்னா சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரது உடலில் வயிற்று பகுதி மேலிருந்து நீளமாக கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் அவருடைய குழந்தையை யாரோ திருடியிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்த பொலிஸார், அவருடைய மேல்வீட்டை சேர்ந்த ப்ரூக் க்ரூஸ் மற்றும் அவருடைய காதலர் வில்லியம் ஹோஹன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்த சென்றனர்.

அங்கு வில்லியம் பிறந்து இரண்டு நாட்களே ஆன ஒரு குழந்தையை தன்னுடைய கையில் வைத்திருந்தார். இதனை பார்த்து சந்தேகமடைந்த பொலிஸார் குழந்தையை டிஎன்ஏ பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். அதில், அது சவான்னாவின் குழந்தை என்பது தெரியவந்ததை அடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு, தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தான் ப்ரூக், சவான்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த வில்லியம் தன்னுடைய காதலி, ரத்தக்கறையை சுத்தம் செய்வதை பார்த்து அதிர்ச்சியடைந்து நடந்தவை பற்றி கேட்டறிந்து திடுக்கிட்டுள்ளார்.

உடனே அவருடைய கையில் ஒரு குழந்தையை கொடுத்த ப்ரூக், இது இனிமேல் நம்முடைய குழந்தை. இது தான் நம் குடும்பம் என கூறியிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கொடூரமாக கொலை செய்த ப்ரூக்கிற்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள்தண்டனையும், கொலைக்கு துணைபோன வில்லியமிற்கு பரோலுடன் கூடிய ஆயுள்தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சவான்னாவின் 16 மாத குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவருடைய கணவர் ஆஷ்டன், என்னுடைய மனைவியின் ஆசைப்படியே குழந்தைக்கு "ஹெய்ஸ்லி ஜோ" என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்