சிறுமியின் உள்ளாடையில் படித்திருந்த டி.என்.ஏ-வால் 18 வருடங்களுக்கு பின் சிக்கிய குற்றவாளி கொலை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் சிறுமியை கொடூரமாக கொலை செய்து சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளி, சிறையில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கவின் ஓக்லஹோமா பகுதியில் கடந்த 1997ம் ஆண்டு, ஷானோன் ஹசென் என்கிற தாய் தன்னுடைய மகள் கிறிஸ்டனை அறையில் உறங்கவைத்துவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் மாலை 6 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, மகள் காணாமல் போயுள்ளார். மேலும், அங்கிருந்த ஜன்னல், தரை பகுதிகளில் ரத்தக்கறைகள் மற்றும் தன்னுடைய மகளின் உள்ளாடை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமான தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார் சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமான விசாரணை மேற்கொள்ளும் போது, சிறுமியின் உள்ளாடையில் இருந்த டி.என்.ஏ அந்தோனி ஜோசப் பால்மா (59) என்பருடன் ஒத்துப்போனது.

அந்த சமயம் பால்மா சிறுமியின் அக்காவுடன் டேட்டிங் சென்றிருந்தார்.

இதனையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த பொலிஸார், 2015ம் ஆண்டு குற்றவாளியை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளி பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பளிக்கப்பட்டு 13 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், பால்மா நிலைகுலைந்து சிறையில் கிடந்துள்ளார். வழக்கமான ஆய்வின்போது பொலிஸார் இதனை பார்த்து வேகமாக மருத்துவ சிகிசிச்சைக்கு உட்படுத்தினர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதற்கான சரியான காரணம் குறித்து பொலிஸார் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அதே சிறையில் இருக்கும் கொலை குற்றவாளி தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்