பூங்காவில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் மீது பாய்ந்த சிறுத்தை! கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பாதுகாவலர்கள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் வனவிலங்குகள் பூங்காவில் பாதுகாப்பு சுவரை தாண்டி செல்பி எடுக்க முயன்ற பெண் மீது சிறுத்தை பாய்ந்து கடித்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் 30 வயதான பெண் ஒருவர், பாதுகாப்பு தடையை தாண்டி கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

அப்போது திடீரென அந்த பெண் மீது பாய்ந்த சிறுத்தை கையை கடித்து குதற ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த தாயும், மகனும் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.


இதனையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் அந்த பெண்ணை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை உறுதி செய்து தகவல் வெளியிட்டுள்ள பூங்கா நிர்வாகம், அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு அச்சுறுத்தும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்