வேலை தேடி விண்ணப்பித்த நபர்: கைரேகையால் அம்பலமான கொலைக் குற்றம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வேலை தேடி விண்ணப்பித்த நபரின் கைரேகை 20 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த கொலைக் குற்றவாளியை சிக்க வைத்துள்ளது.

புளோரிடா மாகாணத்தின் பிராண்டன் பகுதியில் குடியிருக்கும் 51 வயதான டாட் பார்கெட் என்பவர் புதனன்று 1998 ஆம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

சோண்ட்ரா பெட்டர் என்ற பெண்மணியை கொலை செய்தது தொடர்பாகவே பொலிசார் கடந்த 20 ஆண்டுகளாக டாட் பார்கெட் என்பவரை தேடி வந்துள்ளனர்.

அப்போது 68 வயதான சோண்ட்ரா பெட்டர் தமது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மாகாணத்தின் வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

சம்பவத்தன்று பணியிடத்தில் வைத்தே சோண்ட்ராவை பார்கெட் கொலை செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சோண்ட்ரா கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும்,

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சந்தேக நபரின் டி.என்.ஏ சேகரிக்கப்பட்டது எனவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

விரல் அடையாளங்கள், ரத்த மாதிரி மட்டுமின்றி, கொலைகாரன் தொடர்பில் நேரில் பார்த்தவர்களின் தகவல் என அனைத்தும் திரட்டப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால் தொடர்புடைய நபரை கைது செய்ய பொலிசாரால் முடியாமல் போனது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஆண் செவிலியர் பணிக்காக பார்கெட் விண்ணப்பித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சுகாதார நிறுவனமானது விண்ணப்பதாரரின் பின்னணியை ஆய்வுக்கு உட்படுத்தவும், அவரது விரல் ரேகையையும் கோரியிருந்தது.

இதில் பார்கெட்டின் விரல் அடையாளங்களும், கொலை சம்பவம் நடந்தபோது நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த அங்க அடையாளங்களும் பொருந்தியுள்ளது.

இதனையடுத்து பார்கெட்டை கண்காணித்த மாகாண பொலிசார், புதனன்று அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்