முடி வெட்டும் கடையிலிருந்து உடல் முழுவதும் இரத்தத்துடன் வெளியில் வந்த நபர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் முடிதிருத்தும் கடையில் இருந்து இளைஞர் ஒருவர் உடல்முழுவதும் இரத்தத்துடன் வந்ததை அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்போனில் படம்பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள முடிதிருத்தும் கடைக்குள் இளைஞர் ஒருவர் முடிவெட்டி கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர், கதவை உள்பக்கமாக தாழ்பாள் இட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் உள்ளிருந்து பெரும் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சமயத்தில் கடையை கடந்து சென்ற ஜூலியோ குஸ்மான் என்பவர் நாற்காலியின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளார்.

அப்போது அந்த மர்ம நபர் முடி திருத்த சென்ற இளைஞரின் கழுத்து, நெஞ்சு பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.

ஆள் வருவதை பார்த்ததும் உள்பக்கமாக அந்த நபர் தப்பி ஓடியுள்ளான். பின்னர் அந்த இளைஞர் உடல்முழுவதும் இரத்தத்துடன் வெளியில் நடந்து வந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் யாரும் உதவி செய்யாமல், தங்களுடைய செல்போனில் படம்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடையின் உள்பக்கத்தில் மறைந்திருந்த 44 வயது நபரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்