நியூயார்க்கில் புல்லட் ரயில் வேகத்தில் பரவும் கொரோனா! 26,000 பேருக்கு பாதிப்பு..400வெண்டிலேட்டர்கள் மட்டும் அனுப்பிய டிரம்ப் அரசு

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் புல்லட் ரயில் வேகத்தில் கொரோனா பரவி வருவதாக அம்மாகாண ஆளுநர் Andrew Cuomo தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலேயே அதிகம்பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகரமாக நியூயார்க் நகரம் உள்ளது. இதில், இரண்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கிட்டத்தட்ட 26,000பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாகாணத்தில் 210பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அடுத்த மாதம் அமெரிக்காவின் முழு வணிகமும் துவங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸின் புதிய மையமாக அமெரிக்க மாறி வருகிறது என்று சுட்டிகாட்டியிருந்தது.

இது குறித்து பேசிய நியூயார்க் மாகாண ஆளுநர் Andrew Cuomo, “இந்த பாதிப்பு காலிபோர்னியா, இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களில் எளிதில் பரவும். அமெரிக்க பெடரல் அவசரநிலை மேலாண்மை நிறுவனம் 400 வெண்டலேட்டர்களை மட்டும் அனுப்பியுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 26ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் யாரை பலி கொடுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.

எங்களிடம் 7,000 வெண்டிலேட்டர்களே உள்ளன. ஆனால், 30,000 வெண்டிலேட்டர்கள் தேவைப் படுகின்றன.

தற்போது வைரஸ் பரவும் வேகத்தை பார்த்தால் புல்லட் ரயிலின் வேகம்போல் உள்ளது” என்றார்

மேலும், அமெரிக்கா அரசு மனித உயிர்களை விட பொருளாதாரத்தை முன்நிறுத்தி பார்க்கிறது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்பை மறைமுகமாக சாடினார்.

தற்போது நியூயார் நகரில் கல்லூரிகள், உணவகங்கள் ஓட்டல்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

நியூயார் மாகாணத்தில் 25,665 கொரோனா நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது மொத்தம் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களில், பாதிக்கு மேல் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்