வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்புகிறார்... வலை வீசி தேடும் பொலிசார்! வெளியான புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனோவை பரப்ப திட்டமிட்டுள்ளதாக வீடியோவில் கூறிய, இளம் பெண்ணை பொலிசார் தேடிவரும் நிலையில், அவரைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறப்பட்டுள்ளது.

18 வயது மதிக்கத்தக்க Lorraine Maradiaga என்ற பெண் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெக்சாசின் Carrolton பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்னாப்சாட்டில் வெளியிடப்பட்ட வீடியோவில், Lorraine Maradiaga என்று நம்பப்படும் பெண் கொரோனா வைரஸிற்கான நேர்மறை சோதனை முடிவுகள் வந்ததாகவும், கொரோனா வைரஸை வேண்டுமென்றே பரப்புவதாகவும் கூறுகிறார்.

ஆனால், இரண்டாவது வீடியோவில் குறித்த பெண், ஷாப்பிங் கடையான வால்மார்ட்டில் இருந்து கொண்டு, அச்சுறுத்தல்களை செய்ய துவங்குகிறார்.

அதில், நான் வால்மார்ட்டில், இங்கு ஒவ்வொரு குறிப்பிட்ட சிலரை பாதிக்கப்போகிறேன் என்று கூறுகிறார். அதன் பின் அடுத்த வீடியோவில், நீங்கள் கொரோனா வைரஸைப் பெற விரும்பினால், இறக்கவும், என்னை அழைக்கவும், நான் உன்னைச் சந்திப்பேன், நான் உன் வாழ்க்கையை சுருக்கிக் கொள்வேன் என்று அச்சுறுத்தியதாக பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும் இவர் உண்மையில் கொரோனா வைரஸிற்கு நேர்மறையான முடிவுகளை பெற்றாரா? என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. இதுவரை இவர் கண்டுபிடிக்கப்படவில்லை,

இதன் காரணமாக இவர், உண்மையில் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அவரது சமூக ஊடக நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்து வருகிறோம்.

இதனால் குறித்த பெண் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்