பெண்ணின் வீட்டில் பொருளை கொடுக்க கதவை திறந்து உள்ளே சென்ற ஓட்டுனர்! அப்போது அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in அமெரிக்கா
1199Shares

அமெரிக்காவில் அமேசான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் பிரமாண்ட நாயிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பான திக் திக் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேஸான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் வீடுகளுக்கு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீடு ஒன்றின் சுற்றுச் சுவரின் கதவைத் திறந்து உள்ளே சென்ற அவரை 80 கிலோ எடை கொண்ட இங்லிஷ் மஸ்டிஃப் வகை நாய் ஒன்று விரட்டியது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் நொடிப் பொழுதில் சுதாரித்த அந்த ஓட்டுநர் ஓடிச் சென்று சுவரை அலாக்காகத் தாண்டி உயிர் தப்பினார்.

இதன்பின்னர் இறுதியில் அந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பொருளை வாங்கிக் கொண்டார்.

அந்த ஓட்டுனர் மட்டும் சரியான நேரத்தில் சுவரை குதிக்கவில்லை என்றால் அவரின் நிலை என்னவாகியிருக்கும் என்றே நினைத்து பார்க்க முடியவில்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்