காதலிக்கு காதலன் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு: வெளியான இரகசியத்தால் குடும்பமே குலைந்த சோகம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
225Shares

காதலன் ஒருவர் தனது காதலிக்கு கிறிஸ்துமஸ் பரிசாக DNA கிட் ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த காதலியும் அந்த DNA கிட்டை வைத்து தன் உறவினர்களை தேடியுள்ளார். அப்போது வெடித்தது வினை! அந்த காதலிக்கு ஒரு ஒன்றுவிட்ட தங்கை இருப்பதாக அந்த கிட் மூலம் தெரியவர, காதலனின் குடும்பத்தார் முன்னிலையில் மொபைலை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, தன் தாயிடம் அம்மா எனக்கு யாராவது ஒன்று விட்ட தங்கை இருக்கிறாளா என்று கேட்டிருக்கிறார் அந்த காதலி.

முதலில் அது எப்படி இருக்கமுடியும் என்று கேட்டுவிட்டு சிரித்த அந்த தாய், பின்னர் ஒரு குடும்பமே தான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பதை உணராமல், 30 வருட இரகசியம் ஒன்றை மகளிடம் கூற, அந்த பெண் மட்டுமல்ல, அவரது காதலன் குடும்பமே உறைந்துபோயிருக்கிறது.

அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு இரண்டு நாட்கள் நான் வீட்டை விட்டு போய்விட்டேன். அப்போது என் முன்னாள் காதலர் ஒருவரை சந்திக்க, அவருடன் அந்த வார இறுதியை செலவிட்டேன். அப்போது நான் கர்ப்பமாக, நடந்ததை உன் அப்பாவிடம் மறைத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் அந்த பெண்ணின் தாய்.

file photo

யாரோ ஒருவரின் பிள்ளையை அந்த பெண்ணின் தந்தை தன் குழந்தையாக வளர்க்க, DNA கிட் உண்மையை போட்டு உடைத்துவிட்டது.

தான் வாங்கிக் கொடுத்த DNA கிட்டால் தன் காதலியின் குடும்பமே சிதறிப்போனதால் வருத்தத்தில் இருக்கிறார் அந்த காதலன். காதலியின் குடும்பத்தைப் பற்றி சொல்லவேண்டுமா என்ன!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்