மட்டக்களப்பில் மழை வீழ்ச்சி தொடரும்

Report Print Rusath in காலநிலை
125Shares
125Shares
lankasrimarket.com

மட்டக்களப்பில் தற்போது பெய்து கொண்டிருக்கின்ற மழைவீழ்ச்சி நாளை வரை தொடரும் என மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நவகிரி நகர் பகுதியில் 77.0 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 62.0 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளிப் பகுதியில் 19.0 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாப் பகுதியில் 36.3 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 20.0 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் இன்றைய தினம் பதிலாகியுள்ளன.

அத்துடன், வாகனேரிப் பகுதியில் 15.6 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 17.2 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், கதிரவெளிப் பதியில் 28.4 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும், மட்டக்களப்பு நகர் பகுதியில் 47.4 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

மேலும், தற்போது பெய்து கொண்டிருக்கின்ற மழைவீழ்ச்சியும் நாளை வரை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்