நாளை முதல் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை அறிவிப்பு!

Report Print Samy in காலநிலை
794Shares
794Shares
lankasrimarket.com

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நாளை (04) முதல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக நாட்டின் மேல், வடமேல், தென்பகுதி கடலோர பகுதிகளில் காலை வேலையிலும் மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் (10cm) வரையிலான மழை பெய்யக் கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமாக காணப்படும் என்பதுடன், மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்