இனி இன்ஸ்டாகிராமிலும் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யலாம்

Report Print Kabilan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டும் பகிரும் வசதி உள்ளது. இந்நிலையில், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக, வெளியாகியுள்ள தகவலை உறுதிபடுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்துள்ளது.

இது மட்டுமின்றி, அழைப்புகள், வீடியோ கால் சார்ந்த விவரங்களும் இந்த செயலியில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு, இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், ஸ்னாப்சாட் செயலிக்கு மாற்றாக இன்ஸ்டாகிராம் செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன்மூலம், ஆண்ட்ராய்டு மற்றும் IOS இயங்குதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக உள்ள இன்ஸ்டாகிராமில், நண்பர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள செயலியை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இனி இருக்காது.

ஆனால், இந்த வசதி எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்