இஸ்லாம் பெண் இப்படி செய்யலாமா? தடைகளை தாண்டி முன்னேறிய அழகி

Report Print Deepthi Deepthi in அழகு
0Shares
0Shares
lankasri.com
advertisement

நான் ஒரு இஸ்லாம் பெண் என்பதால் மொடலிங் துறையில் நான் அணியும் ஆடைகளை பார்த்து எனது உறவினர்கள் எள்ளி நகையாடியபோதும், எனது பெற்றோர்களின் ஆதரவோடு மொடலிங் துறையில் வலம் வருகிறேன் என்கிறார் Andleeb Zaidi.

தனது மொடலிங் பயணம் குறித்து Andleeb Zaidi கூறியதாவது, ஹைதராபாத்தில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எனது தோழிகளுடன் சேர்ந்து செலவுக்காக மொடலிங் செய்ய ஆரம்பித்தேன்.

advertisement

அப்போது தான் எனது தோழி ஒருவர், Femina Miss India 2016 - இல் நீ கலந்துகொள் என என்னை உற்சாகப்படுத்தினார். அந்த போட்டியில் கலந்துகொள்வதற்கு எந்த மாதிரி தயாராக வேண்டும் என்பது எனக்கு தெரியாது.

பேஷன் ஷோவில் எப்படி நடக்க வேண்டும், எந்த மாதிரியான ஆடைகள் அணிவது என அந்த போட்டி குறித்த எவ்வித புரிதலும் இல்லாமல் தான் அதில் கலந்துகொண்டேன்.

அந்த போட்டியின் போது பிகினி ஆடை அணிய நேரிட்டது, அதனைப்பார்த்து எனது உறவினர்கள் எனது வீட்டிற்கு போன் செய்து எதற்காக உங்கள் பெண் இவ்வாறு நடந்துகொள்கிறாள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இதனை கேட்ட எனது தந்தை என்னை தொடர்புகொண்டு, உனது இந்த செயலால் அம்மா மிகவும் வேதனையாக உள்ளார் என என்னிடம் தெரிவித்தார்.

இதனை கேட்ட எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் ஒரு இஸ்லாம் பெண் என்பதாலோயே எனது உறவினர்கள் மத்தியில் இருந்து எனக்கு அதிக எதிர்ப்புகள் வந்தது.

இஸ்லாம் மதத்தை சேர்ந்த நீ, எதற்காக இவ்வாறு உடலை உடலை வெளிச்சம்போட்டு காட்டி பணம் சாம்பாதிக்கிறாய் என என்னிடம் கேள்வி எழுப்பினர்.

ஆனால், எனது தந்தையோ நடந்து சம்பவம் இருக்கட்டும், இனிவரும் விளம்பரங்களில் சற்று பார்த்து நடந்துகொள் என என்னிடம் கூறினார்.

தற்போது அதிக வருவாய் ஈட்டகூடிய விளம்பரங்களில் நடித்து வருகிறேன், எனது விளம்பரங்களை பார்த்துவிட்டு அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர்.

எனது பெற்றோர் மற்றும் எனது நண்பர்கள் மட்டுமே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.

advertisement

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்