ஒன்ராறியோ மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவின் ஒன்ராறியோவில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு முதல் குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு 15 டொலர்களாக அதிகரிக்கப்டும் என லிபரல் கட்சி அறிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பு பகுதி நேர ஊழியர்களிற்கும் அதிகரிக்கும். இது மட்டுமன்றி குறைந்த பட்ச விடுமுறை உரிமமும்- தொழிலாளர் மாற்றியமைப்பின் ஒரு பகுதியாக-அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கத்லின் வின் இன்று இந்த அறிவித்தலை செய்துள்ளார். இந்த அதிகரிப்பு மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஜனவரியில் குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு 14 டொலர்களாக அதிகரிக்கப்பட்டு அடுத்த வருடம் மணி நேரத்திற்கு 15 டொலர்களாக அதிகரிக்கப்படும் எனவும் கத்லின் வின் கூறியுள்ளார்.

இதனால் பகுதி நேர ஊழியரகளும் சமமான ஊதியத்தை பெறுவர். மட்டுமின்றி குறைந்த பட்ச விடுமுறை உரிமம் ஊதியத்துடன் இரண்டு வாரங்களிலிருந்து மூன்று வாரங்களாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று வார ஊதியத்துடனான விடுமுறை என்பது குறித்த நிறுவனம் ஒன்றில் ஐந்து வருடங்கள் பணியாற்றிய பின்னர் வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.

மேலும் ஊழியர் ஒருவர் தங்கள் வேலை மாற்றத்தை 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் மூன்று மணி நேரத்திற்கான ஊதியம் வழங்கப்படுமெனவும் கூறப்படுகின்றது.

இந்த ஊதிய மாற்றமானது ஒன்ராறியோ மக்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் வியப்பூட்டும் மாற்றங்களை நிகழ்த்தும் எனவும் முதல்வர் கத்லின் வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments