கனடா நாட்டின் பெருமைகளை ஏழு மொழிகளில் பாடலாக தயாரித்த தமிழ் மகன்

Report Print Gokulan Gokulan in கனடா
0Shares
0Shares
lankasri.com

கனடாவின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரபல பாடகரும், மின்னல் இசையின் தயாரிப்பாளருமான செந்தில்குமரன் பாடலொன்றை ஏழு மொழகளில் மிகச் சிறப்பாக தயாரித்துள்ளார்.

ஐந்து நிமிடங்கள் மட்டுமே கொண்ட அந்த பாடல் கனடாவின் கலாச்சார பன்முகத்தன்மை, தேசிய அடையாளங்கள், நகரங்கள், முக்கியமான இயற்கை காட்சிகள் அனைத்தையும் உள்வாங்கி மிகவும் சிறப்புற தயாரித்தது மட்டுமன்றி பாடலின் தமிழாக்கத்தை தானே பாடியும் உள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் நெருங்கிய தோழரும் பிரபல இசையமைப்பாளருமான பிரவின் மணி அவர்கள் இப்பாடலிற்கு இசை அமைத்துள்ளார்.

கனடாவில் இதுவரை எந்த இசை நிறுவனங்களும் நினைத்துப்பார்க்காத ஒரு சிறந்த முயற்சியை தமிழ் மகன் ஒருவர் தயாரித்து வெளியிட்டுள்ளமை தமிழராகிய நம் அனைவருக்குமே பெருமைதரக்கூடிய ஒரு செயலாகும்.

முக்கியமாக கனடிய தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தேடி தரக்கூடிய ஒரு சிறந்த முயற்சியாகும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments