காட்டுத்தீயின் எதிரொலி: மக்களை வெளியேற உத்தரவு

Report Print Gokulan Gokulan in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கம்லூப்ஸ் பகுதிக்கு கிழக்கே உள்ள மொன்ரே லேக் பகுதி காடுகளில் தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்ததை அடுத்து, அந்த பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 வீடுகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ள அதிகாரிகள், மேலும் சுமார் 60 வீடுகளில் உள்ளவர்களை ஆயத்தமாக இருக்குமாறும், எந்தவேளையிலும் உடனடியாக, குறுகிய கால அறிவிப்பினுள் வெளியேற தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கம்லூப்ஸ் பகுதியிலேயே தஞ்சமடைந்துள்ள நிலையில், தற்போது வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ள மக்களையும் அந்த பகுதிக்கே செல்லுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தற்போதும் 150க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ எரிந்துவரும் நிலையில், தற்போது நிலவும் காலநிலை எதிர்வரும் வாரங்களில் நிலைமையினை மேலும் மோசமாக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்