வாழ்த்துகளை அள்ளிய ஜஸ்டின் ட்ரூடோவின் டுவிட்

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா தமிழ் விழாவை சிறப்பித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ‘வணக்கம்’ ட்வீட் தற்போது பல்லாயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான கனடா தமிழர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

கனடாவின் டொரன்டோ நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற ‘தமிழர் திருவிழா’ நடைபெற்றுள்ளது.

கலாசார வேற்றுமைகள் மறந்து உலகின் அத்தனை நாடுகளின் பல முக்கிய விழாக்களை அந்தக் கலசாரத்துக்குச் சொந்தமான மக்களோடு இணைந்து அதை அரசு விழாவாகவே கொண்டாடி வருகிறது கனடா. கனடாவின் இந்த நட்புறவு முயற்சிகளுக்கு முழுமுதற் காரணமாக இருப்பவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

இந்த வகையில், சமீபத்தில் ‘தமிழர் விழா’ ஒன்றை கனடா சிறப்பானதொரு விழாவாகக் கொண்டாடியுள்ளது. இந்தச் சிறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ. இதையடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் இளநீர் அருந்தும் புகைப்படத்துடன் ‘வணக்கம்’ தெரிவித்திருந்த ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படம் அவரது செயல்களுக்காவும் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்