கனடாவில் தீக்கு இரையான தாயும் இரட்டை பெண் குழந்தைகளும்!

Report Print Thayalan Thayalan in கனடா
கனடாவில் தீக்கு இரையான தாயும் இரட்டை பெண் குழந்தைகளும்!
197Shares
197Shares
lankasrimarket.com

தீ அனர்த்தமொன்றில் தாய் மற்றும் அவரது இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

அவரது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை கண்ட அயலவர்கள், தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை விரைந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் சமையலறை பகுதியிலிருந்தே தீ பரவியிருப்பதாக, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட உள்ளூர் தீயணைப்பு பிரிவின் தலைவர் குறிப்பிட்டார்.

இதுவொரு எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட விபத்தென சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்