நடுவானில் பறந்தபோது உடைந்து விழுந்த விமான என்ஜின்: கனடாவில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

பயணிகள் விமானம் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது உடைந்து விழுந்த என்ஜின் பாகங்கள் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம் சில தினங்களுக்கு முன்னர் பாரீஸில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டுள்ளது.

கனடா வானவெளியில் பறந்துக்கொண்டு இருந்தபோது திடீரென ஒரு என்ஜின் வெடித்துள்ளது.

வெடி விபத்தை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை திசை திருப்பி கனடாவில் உள்ள Labrador விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர்.

பின்னர், பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் பத்திரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அனுப்பப்பட்டனர்.

இவ்விபத்து குறித்து கனடா விமான போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விமானம் பறந்த இடம் தொடர்பாக தகவல்களை சேகரித்த அதிகாரிகள் ஹெலிகொப்டர் உதவியுடன் என்ஜின் பாகங்களை தேடியுள்ளனர்.

கடின முயற்சிக்கு பின்னர் Greenland பகுதியில் உடைந்து விழுந்த என்ஜின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகங்களை சேகரித்துள்ள கனேடிய அதிகாரிகள் அவற்றை பரிசோதனை செய்வதற்காக பாரீஸிக்கு அனுப்பியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் என்ஜினில் இருந்த இரும்பு விசிறிகளில் ஒன்று உடைந்ததால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்