13 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கனடா பிரதமர்

Report Print Balamanuvelan in கனடா
0Shares
0Shares
lankasri.com

ஈராக் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்து பின்னர் மீட்கப்பட்ட 13 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் கனடா பிரதமர்.

Yazidi இனத்தைச் சேர்ந்த 13 வயதான Emad Mishko Tamo, 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் தனது குடும்பத்தைப் பிரிந்தான்.

அகதி முகாம் ஒன்றில் அவன் இருக்கும் படம் ஒன்று வலைத்தளங்களில் வெளியானதையடுத்து அவன் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டான்.

வீடியோ ஒன்றில் தன்னை மீட்டதற்காக கனடாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அச்சிறுவன், பிரதமரைச் சந்திக்கும் தன் ஆசையையும் வெளியிட்டிருந்தான்.

பிரதமரிடமிருந்து பதில் ஏதும் வராத நிலையில், எப்படியாவது பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற அவனது ஆசையை நிறைவேற்ற விரும்பிய Yazidi Association of Manitoba என்னும் அமைப்பினர் Manitoba பல்கலைக்கழகத்திற்கு ஒரு மாநாட்டில் பங்கு கொள்வதற்காக வந்திருந்த பிரதமரைச் சந்திக்க முடிவு செய்தனர்.

தகவலறிந்த பிரதமரும் அச்சிறுவனை சந்தித்து ஐந்து நிமிடங்கள் பேசினார்.

ஆனால் அது போதாது என்று தெரிவித்துள்ள சிறுவனின் குடும்பத்தினர் இன்னொரு முறை பிரதமரை சந்தித்து அதிக விடயங்கள் குறித்து பேச விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் தப்பி இதுவரை 1000 பேர் கனடா வந்துள்ளனர், இவர்களில் 81 சதவிகிதத்தினர் Yazidi இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் இதற்குமேல் கனடாவுக்கு அகதிகளாக வர விரும்பும் இத்தகையோரிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்