கனடாவில் போராடும் இலங்கை தமிழ் இளைஞன்! ஒன்டாரியாவில் பிரபலமானது எப்படி?

Report Print Vethu Vethu in கனடா
0Shares
0Shares
lankasri.com

இலங்கையில் பிறந்த தமிழ் இளைஞன் பல்வேறு சேவைகளினால் கனடாவில் பிரபல்யமடைந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கனடாவின் Mississauga என்ற பகுதியில் வாழ்ந்து வரும் குமரன் நடேசன் என்ற இளைஞனே இவ்வாறு பிரபல்யமடைந்துள்ளார்.

இலங்கையில் பிறந்து, இந்தியா, ஒமான் மற்றும் Scarborough பகுதியில் வளர்ந்த குமரன் நடேசன் தற்போது கனடாவின் Mississauga பகுதியில் வசித்து வருகிறார்.

ஒன்டாரியோவின் அரசாங்க மற்றும் நுகர்வோர் சேவை அமைச்சின் மூத்த வர்த்தக ஆலோசகரான அவர், பல்வேறு அரச சார்பு சேவை வழங்குநர்களின் நலன்களை பெற்றுக் கொண்டு தனது நாட்களை தனது மாகாணங்களை வளர்க்க உதவி வருகின்றார்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் சிறு நடுத்தர நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஒரு மூலோபாய தகவல் தொடர்பு நிறுவனமான Konnect கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு குமரன் தலைமை தாங்குகிறார்.

வேலை மற்றும் வணிகத்திற்கு வெளியே, 6 Degrees Citizen Spaceஇல் இளம் ஆலோசகராக உள்ளார். அத்துடன் comdu கூட்டுறவு நிறுவனராக செயற்படுகின்றார்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலையான அபிவிருத்திக்கு உறுதியான புலம்பெயர்ந்தோர் இணைப்பாகும். மற்றும் கனடாவில் பின்தங்கிய தமிழ் மக்களுக்கான பொது சேவை இணைப்பின் இயக்குனராகவும் அவர் தனது பணியை மேற்கொள்கின்றார்.

நீங்கள் " பெற்று கொண்டதனை விடவும் குறைந்தபட்சம் இரண்டு மடங்கு அதிகமாக கொடுக்க வேண்டும்" என்ற ஆலோசனையால் வழிநடத்துடம் குமரன் தெற்காசிய சமூகத்தில் உள்ள ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளார்.

குமரனுக்கு, ஒரு வித்தியாசமான பிராந்தியமாக தனது பிராந்தியம் காணப்பட வேண்டும், குடியிருப்பாளர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் மற்றும் பயம் அல்லது பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்பதே நோக்கமாகும். அதற்காக அவர் தனது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்