பிரபல கவர்ச்சி நடிகை தற்கொலை: காரணம் இதுதான்

Report Print Raju Raju in சினிமா
0Shares
0Shares
lankasri.com
advertisement

பிரபல கவர்ச்சி நடிகை Bitasta Salini அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பெங்காலி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை Bitasta Salini. இவர் மொடலாகவும் இருந்து வருகிறார்.

advertisement

Bitasta தனது பெற்றோருடன் வசிக்காமல் தனியாக கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

நேற்று Bitasta செல்போனுக்கு அவர் அம்மா பல முறை கால் செய்தும் அவர் அதை எடுக்கவில்லை. பின்னர் அவர் தன் மகள் வீட்டுக்கு வந்து கதவை வெகு நேரம் தட்டியுள்ளார்.

ஆனாலும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார் கதவை உடைத்து வீட்டுக்குள் போன போது நடிகை Bitasta சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார்.

அவர் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. மேலும் அவர் கை மணிக்கட்டு மற்றும் உடலில் காயங்கள் இருந்துள்ளன.

அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய பொலிசார் பின்னர் கூறுகையில், சமூகவலைதளத்தில் அவர் பதிவின் மூலம் ஏற்ப்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துள்ளதாக கருதுகிறோம்.

இது குறித்து தீவிரமாக தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments