கொதிக்கும் இந்தி ரசிகர்கள்: உருக்கமான பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

Report Print Arbin Arbin in சினிமா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

மக்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை என லண்டன் நிகழ்ச்சியில் இந்தி ரசிகர்கள் வெளியேறிய விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், லண்டனில் கடந்த வாரம் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். 'நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

advertisement

இதில் ஏராளமான தமிழ், இந்தி ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி லண்டன் தமிழர்களுக்காக நடத்தப்பட்டதால் அதில் அதிகம் தமிழ் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இதனால் அதிருப்தி அடைந்த இந்தி ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது வருத்தத்தைப் பதிவு செய்தனர்.

இதுபற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்,

மக்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களுக்காக கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்தவரை சிறப்பான பாடல்களை தர நான் முயற்சிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments