இந்தியாவில் விற்பனை நிலையங்களை திறக்கும் கூகுள்: ஏன் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

கூகுள் மட்டுமல்லாது பல முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களும், கணினி, கைப்பேசி நிறுவனங்களும் பல நாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒன்லைன் ஸ்டார்களை திறந்துள்ளன.

இதன் ஊடாக வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தவாறே பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

எனினும் கூகுள் நிறுவனம் ஒன்லைன் ஸ்டோர்களை தாண்டி நேரடியான விற்பனை நிலையங்களையும் இந்தியாவில் திறக்கவுள்ளது.

இதற்கு காரணம் அந்நிறுவன்தின் ஸ்மார்ட் கைப்பேசியான Pixel கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க என தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே மிகவும் விரைவாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் கைப்பேசி சந்தையாக இந்தியா விளங்குகின்றமை வெளிப்படையானதே.

எனவே இவ்வாறான விற்பனை நிலையங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட சேவைகளையும் வழங்குவதன் ஊடாக Pixel கைப்பேசி விற்பனையை அதிகரிக்க முடியும் என கூகுள் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்