அதிரடியில் இறங்கிய பேஸ்புக்: 58 கோடி போலி கணக்குகளை முடக்கியது

Report Print Kabilan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

பேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 58 கோடி போலி பேஸ்புக் கணக்குகளை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் சுமார் 5 கோடி பேரின் விவரங்கள் ஒரு செயலி மூலம் திருடப்பட்டு, Cambridge Analytica என்ற அரசியல் பிரச்சார நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறை நோக்கத்தை தூண்டும் படங்கள், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துக்களை வெளியிடும் பேஸ்புக் கணக்குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு வெளியிடப்படும் கணக்குகள் முடக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 58.3 கோடி போலி பேஸ்புக் கணக்குகளை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், சுமார் 200 செயலிகளுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளது. இது பேஸ்புக் கணக்காளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்