திரிமன்னேவை கழற்றிவிட்டது சரிதான்! வலுவான விளக்கமளித்த சனத் ஜெயசூரியா

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
திரிமன்னேவை கழற்றிவிட்டது சரிதான்! வலுவான விளக்கமளித்த சனத் ஜெயசூரியா
692Shares
692Shares
lankasrimarket.com

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணியில் முன்னணி துடுப்பாட்ட வீரரான திரிமன்னே இடம்பெறவில்லை.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு கிரிக்கெட் வாரியத்தில் வலுவான விளக்கத்தை தெரிவுக் குழு தலைவரான சனத் ஜெயசூரியா அளித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் முன்வரிசை வீரரான திரிமன்னே சமீப காலமாக துடுபாட்டத்தில் சொதப்பி வருகிறார். இதனால் இலங்கை அணியில் அவரது இடம் கேள்வி குறியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த திரிமன்னேவால் சொல்லிக் கொள்ளும் அளவு ஜொலிக்க முடியவில்லை. அவர் மொயீன் அலி பந்தில் தொடர்ந்து ஸ்டம்பை பறி கொடுத்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திரிமன்னே இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக களமிறங்கிய தனன்ஜெய டி சில்வா 300 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

தற்போது ஒருநாள் தொடரிலும் திரிமன்னே கழற்றிவிடப்பட்டுள்ளார். ஒருநாள் அணியில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டதற்கான வலுவான காரணத்தை தெரிவுக் குழு தலைவரான சனத் ஜெயசூரியா கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments