இந்திய அணியின் பயிற்சியாளராக சேவாக் வராததற்கு என்ன காரணம் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்கிற்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி ரவி சாஸ்திரி தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் சேவாக் ஏன் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படவில்லை என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவல் படி, பயிற்சியாளர் நேர்காணலின் போது சேவாக் அனைவரையும் கவர்ந்தாகவும், அப்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டெல்லி அணியின் மிதுன் மனாஸை விரேந்தர் சேவாக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி தற்போதைய பயிற்சியாளருடன் வேலை செய்ய ரவி சாஸ்திரி ஒப்பு கொண்டதால், அவரை தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்ததாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments