வெற்றினா மட்டும் அவங்க..தோல்வினா பழி எல்லாம் எனக்கா? முஸ்தபிசுர் ஆவேசம்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வங்கதேச அணி, மிக மோசமாக இழந்ததால், அந்த அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில் வங்கதேச அணியின் ஆட்டம் மிக மோசமாக இருந்தது.

advertisement

இந்நிலையில் வங்கதேசத்தின் அணித்தலைவரான முஷ்பிகுர் ரஹிம், அணி நன்றாக ஆடும்போது, அதற்கான பெருமை முழுதையும் அணி நிர்வாகம் தட்டிச் செல்கிறது. ஆனால் நன்றாக ஆடாத போது பழி அத்தனையும் அணியின் தலைவர் மீது சுமத்தப்படுகிறது.

நான் இதை ஏற்றுக் கொள்கிறேன் மறுக்கவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் ஆடிய ஆட்டங்களில், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் தான் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டோம்.

அதற்கு காரணம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வென்றும் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது தான் என்று கூறுகிறார்கள். நானும் மனிதன் தானே, தவறுகள் செய்வது இயல்பு தானே, இதனால் நான் என் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்