141 வருட கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேச அணி படைத்த அரிய சாதனை

Report Print Raju Raju in கிரிக்கெட்
631Shares
631Shares
lankasrimarket.com

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 43 ஓட்டங்களுக்கு பரிதாபமாக ஆல்-அவுட் ஆகியது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுபயணம் செய்து வங்கதேச அணி விளையாடி வரும் நிலையில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இதில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிதன் தாஸ் மட்டும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிகபட்சமாக 25 ஓட்டங்கள் அடித்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் வந்த வேகத்திலே பெவிலியனுக்கு நடையை கட்டியதால், 19 வது ஓவரில் 43 ஓட்டங்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது.

வங்கதேசத்தின் மிக மோசமான ஆட்டத்தால், 141 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சர்வதேச கிரிக்கெட் அணியின் மூன்றாவது குறைந்த ஸ்கோர் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. முன்னதாக இந்திய அணி 42 ஓட்டங்கள் மற்றும் நியூசிலாந்து 39 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்