நிஜ வாழ்க்கையிலும் ஸ்ரீதேவி நடித்தார்: பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1061Shares
1061Shares
lankasrimarket.com

ஸ்ரீதேவி நிஜ வாழ்க்கையிலும் குடும்ப சூழல் காரணமாக நடித்ததாக இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் தனது முதல் திரைப்பட கதாநாயகி ஸ்ரீதேவி குறித்து பலருக்கும் தெரியாத விடயங்களை இயக்குனர் ராம் கோபால் வர்மா பகிர்ந்துள்ளார்.

அவருடைய பதிவில், இன்று ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை.

அவரது இழப்பைப் பற்றியோ, அழகிய தோற்றத்தையோ, திறமையையோ தாண்டி நான் அவரைப் பற்றி சொல்ல அதிமாகவே உள்ளது.

கண்கவர் தோற்றம், அழகிய குடும்பம், இரண்டு மகள்கள் என மிகப் பகட்டான ஒரு வாழ்க்கையாகவே அவரது வாழ்க்கை நம்மில் பலருக்கும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் அவர் அப்படி வாழ்ந்தாரா? தந்தை இறக்கும் வரை மகிழ்ச்சியாக இருந்த ஸ்ரீதேவி பின்னர் தன்னைத்தானே ஒரு கூட்டுக்குள் அடைத்துக்கொண்டார்.

அன்றைய காலக்கட்டத்தில் தனது பணத்தை பலரிடம் ஸ்ரீதேவி அப்பா கொடுத்திருந்தார்.

ஆனால் அவர் இறந்த பிறகு அந்த பணத்தை யாரும் ஸ்ரீதேவியிடம் கொடுக்கவில்லை.

இதற்குக் கூடுதலாக ஸ்ரீதேவியின் தாய் ராஜேஸ்வரி தவறான சொத்துகளில் முதலீடு செய்து பல இடங்களில் ஏமாந்தார்.

கையில் காசு இல்லை, ஆறுதல் சொல்லவும் ஆளில்லை என்ற நேரத்தில்தான் போனி கபூர் ஶ்ரீதேவி வாழ்க்கையில் வந்தார்.

இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தைத் தவிர அவர் சமீபத்தில் பெற்ற வேறு பெரிய சந்தோஷம் இல்லை. போனியின் கடன், எதிர்காலத்தைப் பற்றிய கவலை அவருக்கு இருந்தது.

ஒரு ரசிகனாக ஶ்ரீதேவி எனும் நடிகையைத் திரையில் பார்த்து ரசித்திருந்தாலும், அருகில் அவரைத் தெரிந்து கொண்டபிறகு நிஜ வாழ்விலும் அவர் தனது நடிப்பைத் தொடரவே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

பெரும்பாலும் தான் எப்படித் தெரிகிறோம் என்ற கவலையே அவரை ஆட்டிப்படைக்க தொடங்கியது.

அவர் எப்போதும் அந்தளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை,

நான் பெரும்பாலும் யார் மரணத்துக்கும் ரெஸ்ட் இன் பீஸ் என சொன்னதில்லை, ஆனால் முதல் முறையாக ஸ்ரீதேவி மரணத்துக்கு சொல்கிறேன், காரணம், முதல் முறையாக அவர் தன் வாழ்வில் சாந்தியாக இருக்கிறார் என்று சொல்வதா? என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்