கான் நடிகர்கள் குறித்து கத்ரீனா கைப்பின் கருத்து

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com

ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணியில் இருக்கும் சல்மான்கான், அமீர்கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் குறித்து, நடிகை கத்ரீனா கைப் பதிலளித்துள்ளார்.

சல்மான்கான், கத்ரீனா கைப் நடிப்பில் வெளியான ‘டைகர் ஜிந்தா ஹை-2’ படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து, நடிகை கத்ரீனா கைப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘எங்கள் ஜோடி பொருத்தம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியான விடயம். படத்தின் நாயகன் சல்மான்கான், இயக்குனர் அலி உள்பட இந்த படத்தில் பணியாற்றிய பலர் என்னுடைய நண்பர்கள்.

நான் சல்மான்கான், அமீர்கான், ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறேன். இதில், சல்மான்கான் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை பிரதிபலிக்கும் கதைகளில் நடிப்பார்.

அமீர்கான், ஒரு கதையை எப்படி சொன்னால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற வித்தை தெரிந்தவர். மிகச் சிறந்த நடிகர், இயக்குனர், ஆல்ரவுண்டர் அவர்.

ஷாருக்கான், கடுமையாக ஓய்வின்றி உழைக்கக் கூடியவர். வாழ்க்கையை நன்றாக புரிந்து வைத்திருப்பவர். புதுமையாக ஏதாவது செய்ய விரும்புவார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்