ஸ்ரீதேவியை மறந்த மகள் ஜான்வி: இப்படி செஞ்சிட்டாரே

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தன்னை கவர்ந்த நடிகைகள் பட்டியலில் தாயின் பெயரை கூறாமல் விட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது தடக் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்துக்கு பின்னர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாக ஜான்வி கூறியுள்ளார்.

இந்நிலையில் தன்னை மிகவும் கவர்ந்த நடிகைகளாக மதுபாலா, வகீதா ரஹ்மான், மீனாகுமாரி ஆகியோரின் பெயர்களை ஜான்வி குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பல நடிகைகள் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ள ஜான்வி, இந்திய அளவில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்த தனது அம்மா ஸ்ரீதேவியின் பெயரை கூறாமல் விட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்