பிக்பாஸ் பிரபலத்தை நள்ளிரவில் கைது செய்த பொலிசார்: என்ன தவறு செய்தார் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு
907Shares
907Shares
lankasrimarket.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட கத்தி மகேஷை பொலிசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.

தெலுங்கில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினிமா விமர்ச்சராகவும், பத்திரிக்கையாளராகவும் பணிபுரிந்து வந்த கத்தி மகேஷ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் குறுகிய காலத்தில் பலரும் அறியப்படும் நபராக மாறினார்.

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் நடிகை ஸ்ரீரெட்டி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து துணை நடிகை ஒருவர் கத்தி மகேஷ் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்து மக்கள் வணங்கும் கடவுளான ஸ்ரீராமன் பற்றியும் ராமன் குறித்த தூய்மையை விமர்சிக்கும் விதமாகவும் எழுதி வந்த கத்தி மகேஷ் மீது ஸ்ரீபீடம் ஸ்வாமி பரிபூரானந்தா சார்பில் அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனால் கத்தி மகேஷை நேற்று இரவு நள்ளிரவில் அவரது வீட்டில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

கத்தி மகேஷ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்