மகள் வயதுடைய மனைவியுடன் பிரபல நடிகர் போட்டோஷூட்: வைரல் புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
103Shares
103Shares
lankasrimarket.com

பிரபல நடிகர் மலிந்த் சோமனும், அவர் மனைவி அன்கிதா கொன்வாரும் இணைந்து நிற்கும் போட்டோஷூட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழில் பையா, அலெக்ஸ்பாண்டியன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் மலிந்த் சோமன் (52) தன் மகள் வயது பெண்ணான அன்கிதா கொன்வாரை என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இத்திருமணத்துக்கு சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் பிரபல புகைப்பட கலைஞரான விக்டோரியா குருந்திசிவா வித்தியாசமான முறையில் மலிந்தையும், அன்கிதாவையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் காதல் ரசம் சொட்ட இருவரும் பழைய ரயில் நிற்கும் ரயில் நிலையத்தில் நிற்கிறார்கள், மேலும் அங்கு அதிகளவு கடிகாரங்களும் உள்ளன.

குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்