சர்க்கார் பட எதிர்ப்பு விவகாரம்: அன்புமணி ராமதாசுக்கு சவால் விட்ட நடிகர் சிம்பு!

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு
61Shares
61Shares
lankasrimarket.com

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்து விஜய் நடித்து வரும் திரைப்படம் "சர்கார்". விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் நடிகர் விஜய் புகை பிடிப்பதை போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

புகைபிடித்தல் என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்று, புகையிலை தயாரிக்கும் தொழிற்சாலைகள் துவங்கி, உலக சுகாதார நிறுவனம் வரை எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேசமயம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் விஜய் பட போஸ்டரை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, நீங்கள் சிகரெட் இல்லாமல் இருந்தாலும் இன்னும் அழகாக இருப்பீர்கள் என கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சமீப நாட்களாகவே பல்வேறு விவகாரங்களுக்காக குரல் கொடுத்து வரும் நடிகர் சிம்பு சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், சர்கார் படத்திற்கு எதிராக பேசியுள்ள அன்புமணி ராமதாஸ், நேரலையில் மக்கள் முன் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயார் என கூறியுள்ளார்.

முன்னதாக சினிமா குறித்து விவாதிக்க நான் தயார் என அன்புமணி ராமதாஸ் கூறியிருந்ததாக, நடிகர் சிம்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்