பள்ளியில் படித்துக்கொண்டே தொழிலதிபராகி மற்ற பெண்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் சாதனை பெண்

Report Print Athavan in தொழிலதிபர்
47Shares
47Shares
lankasrimarket.com

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் தேன் ஒரு பாரம்பரிய மருத்துவமாக கருதப்படுகிறது. இதை நன்கு புரிந்துகொண்டு தேனி வளர்ப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவி ஒருவர் அதிக வருமானம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் ஆப்கன் பெண்கள் வணிகத்திலும் ஈடுபட ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறார்.

ஆப்கானிஸ்தானில் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஃப்ரோசான். இவர் தேனீ வளர்ப்பின் மூலம் தொழிலதிபராகிப் ஆப்கன் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார்.

ஆப்கானிஸ்தானின் மர்முல் என்னுமிடத்தைச் சேர்ந்த புரோசன் என்கிற சிறுமி 3ஆண்டுகளுக்கு முன் வங்கியில் கடன்பெற்றுத் தேனீ வளர்த்துள்ளார்.

கடனாக பெற்ற பணத்தில் வடக்கு பால்க் மாகாணத்தின் மார்முல் மாவட்டத்தில் தனது வீட்டிற்கு அருகே முதலில் 2 தேன்கூடு வாங்கி தேனி வளர்த்தார். அவரின் வீட்டின் அருகே வளரும் மலர்களிலிருந்து தேனீக்கள் தேன் சேகரிக்க தொடங்கின.

வளரும் மலர்களிலிருந்து தேனீக்கள் தேன்களை சேகரித்தன. அவற்றின் முதல் அறுவடை 16kg (35lb) தேன் தயாரிக்கப்பட்டது, இது ஃப்ரோசான் தனது வங்கி கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் பணத்தை மீட்டெடுப்பதற்கும் உதவியது.

பின்னர் படிப்படியாகத் தொழிலை வளர்த்து இப்போது 12தேன்கூடுகளை வைத்துள்ளார்.

வங்கிக் கடனையும் அடைத்த அவர் கடந்த ஆண்டில் 110கிலோ தேன் சேகரித்துள்ளார்.இதன்மூலம் அவருக்கு ஒரு லட்சம் ஆப்கானி பணம் வருமானமாகக் கிடைத்துள்ளது.

இது ஆப்கானிஸ்தானில் தனி ஒருவரின் ஆண்டு சராசரி வருமானத்தைவிட இரண்டரை மடங்காகும். பன்னிரண்டாம் வகுப்புப் படித்து வரும் புரோசன் அடுத்துப் பொருளியலில் பட்டப்படிப்புப் படிக்கவும், தேனீ வளர்ப்புத் தொழிலை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய ப்ரோசான் 2001 ல் தலிபான் வீழ்ச்சிக்குப் பின்னர்,ஆப்கன் சமுதாயத்தில் பெண்களின் நிலை முன்னேறியுள்ளது. நான் வாழும் கிராமம் ஒரு பாரம்பரிய கிராமமாகும். எனவே எனது கிராமத்தில் பெண்கள் வெளியே வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் அதை எல்லாம் கடந்து நான் தேனீ வளர்ப்பை ஆரம்பித்தபோது, ​​அது ஒரு எளிதான வேலை தான் என்பதை உணர்ந்தேன். அதன் பின் தேனீ வளர்ப்பைப் பற்றி என் கிராம மக்களிடம் சொன்னேன் குறிப்பாக பின்னர் அவர்களும் இந்த தொழிலில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர் என்றார் ப்ரோசான்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்