யாழில் பிரம்மிக்க வைக்கும் அலங்காரத்துடன் நல்லூரானின் கார்த்திகை உற்சவ காட்சிகள்

Report Print Shalini in விழா
0Shares
0Shares
lankasrimarket.com

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 19ஆம் நாளான இன்று காலை சூர்யோற்சவம் நடைபெற்றதைத் தொடர்ந்து மாலை கார்த்திகை உற்சவம் நடைபெறுகின்றது.

குறித்த நிகழ்வில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் வெளிவீதியுலா வலம் வந்து மக்களுக்கு காட்சி கொடுத்தார்.

காண்போரின் கண்ணை கவரும் வகையில் சிறந்த அலங்காரங்களுடன் இன்று வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி கொடுக்கின்றான்.

இன்றைய தினத்தில் கார்த்திகை உற்சவ சிறப்பு பூசைகளும் நடைபெறுகின்றன.

நல்லூர் கந்தனின் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்