கொழுப்பு கரையும்...மார்பக தசைகள் வலிமையாகும்: கண்டிப்பாக இதனை செய்யுங்கள்

Report Print Deepthi Deepthi in உடற்பயிற்சி
0Shares
0Shares
lankasrimarket.com

வயிறு மற்றும் மார்பு பகுதிகளின் ரத்தோட்டத்தை மேம்படுத்தி, கொழுப்புகளை கரைத்து, மார்புத்தசைகளை உறுதியாக்க, பிளேங்க் வித் ஒன் ஆர்ம் ரோவிங் (Plank with One Arm Rowing ) எனும் ஒரு உடற்பயிற்சி உள்ளது.

எப்படி செய்ய வேண்டும்?

முதலில் விரிப்பில் குப்புறப் படுத்துக் கொண்டு கைகளை நிலத்தில் ஊன்றி முழு உடலும் கால் விரல் மற்றும் கைகளால் தாங்குமாறு உயர்த்த வேண்டும்.

பின் இடது கையில் டம்பிள்ஸை எடுத்து, தலையை உயர்த்தி நேராகப் பார்த்தபடி, இடது கையை மடக்க வேண்டும்.

இதேபோல் 15 முறைகள் கைகளை மடக்கி நீட்டிய பின், டம்பிள்ஸை வைத்து விட்டு, குப்புறப் படுத்துப் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

அதன் பின் மீண்டும் உடலை உயர்த்தி, வலது கையால் டம்பிள்ஸைப் பிடித்த படி 15 முறைகள் கைகளை மடக்கி நீட்ட வேண்டும்.

நன்மைகள்

புவி ஈர்ப்பு விசை உடல் முழுவதும் செயல்படுவதால், உடலில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்.

தோள்பட்டை மற்றும் முழங்கைகளுக்கு இடையே உள்ள சதைப்பகுதி வலிமையாகும்.

வயிறு மற்றும் மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும்.

மார்புத்தசைகள் வலுவடையும்.

உடலில் உள்ள கெட்டக் கொழுப்புக்கள் கரையும்.

குறிப்பு

இந்த உடற்பயிற்சியை செய்வதற்கு, டம்பிள்ஸ் இல்லையெனில், வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரம்பி, அதை டம்பிள்ஸ் போல பயன்படுத்தலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்