மனித சடலத்தை மீன்கள் சாப்பிடுமா? உண்மை வெளியானது

Report Print Printha in உணவு
174Shares
174Shares
lankasrimarket.com

கடலில் மிதக்கும் மனித சடலங்களை மீன்கள் சாப்பிடுவதால் மீன்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற தகவல் பரவியதால் மீன் விற்பனையில் சரிவு நிலை ஏற்பட்டது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய மீன் வளத்துறை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன்கள் பொதுவாக மனித சடலங்கள் மற்றும் இறந்து போனவற்றை சாப்பிடும் பழக்கம் இல்லை. பெரிய மீன்கள் சிறிய மீன்களை மட்டுமே சாப்பிடும்.

அதுவும் பெரும்பாலான பெரிய மீன்கள் சிறிய ரக மீன்களை வேட்டையாடி உயிருடன் சாப்பிடுவதையே விரும்பும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சுறாக்களுக்குக் கூட இறந்தவற்றை சாப்பிடும் பழக்கம் இல்லை.

சில சுறாக்களுக்கு மட்டும் மனித உடலை சாப்பிடும் வழக்கம் உள்ளது, ஆனால் அந்த சுறா இனங்கள் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மட்டும் தான் காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ளது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்