பார்சிலோனாவின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்பெயின் அணிக்கு பயிற்சியாளராக நியமனம்

Report Print Kabilan in கால்பந்து
130Shares
130Shares
lankasrimarket.com

உலகக் கிண்ண தொடரில் தோல்வியடைந்த பின்னர், ஸ்பெயின் அணிக்கு பயிற்சியாளராக லூயிஸ் என்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய உலகக் கிண்ண தொடரில் முன்னாள் சாம்பியன் அணியான ஸ்பெயின் அணி, இரண்டாவது சுற்றில் ரஷ்யாவிடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து பெர்னாண்டோ ஹியரோ நேற்று முன்தினம் விலகினார்.

இவர் ஸ்பெயினின் முன்னாள் வீரர் ஆவார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு முன்னாள் வீரரான லூயிஸ் என்ரிக்ஸ்(48) தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

லூயிஸ் புகழ்பெற்ற கிளப் அணியான பார்சிலோனாவின் முன்னாள் பயிற்சியாளர் ஆவார். இந்த தகவலை ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது. லூயிஸ் 2 ஆண்டு காலம் ஸ்பெயின் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

முன்னதாக, இந்த உலகக் கிண்ண கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன்பாக, பயிற்சியாளராக இருந்த ஜூலென் லோப்டெகு ரியல் மாட்ரிட் கிளப்பின் பயிற்சியாளர் பொறுப்புக்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனை அறிந்த ஸ்பெயின் கால்பந்து சங்கம் அவரை அதிரடியாக நீக்கி, பெர்னாண்டோ ஹியரேவை நியமித்திருந்தது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்