3 வது ஆண் குழந்தைக்கு தந்தையானார் மெஸ்ஸி!

Report Print Samaran Samaran in கால்பந்து
0Shares
0Shares
Cineulagam.com

மெஸ்ஸி - அண்டோனெல்லா தம்பதிக்கு 3 வது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்சி தற்போது பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகின்றார்.

இவர் கடந்த 2017 ஜூன் 30ல் அண்டோனெல்லா ரோகுஸோவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். அதில் ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தன் மனைவி கர்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று லா லிகா தொடரில் பார்சிலோனா அணி மலாகா அணியை எதிர் கொள்கிறது.

இதில் மெஸ்சி சொந்த காரணத்திற்காக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. மெஸ்சி ஏன் விளையாடவில்லை என ரசிகர்கள் புரியாமல் தவித்தனர்.

மெஸ்சிக்கு 3வது குழந்தை:

இந்நிலையில் தன் மனைவிக்கு 3வது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். குழந்தைக்கு சிரோ என பெயரிட்டுள்ளார்

மெஸ்சிக்கு ஏற்கனவே தியாகோ (2012), மேட்டியோ (2015) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்