லண்டன் தாக்குதல்: உயிரிழந்தவர்களுக்கு பிரான்ஸ் செலுத்திய நெகிழ்ச்சி அஞ்சலி

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

லண்டன் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரீஸில் உள்ள ஈபிள் டவரின் விளக்குகள் நேற்றிரவு அணைத்து வைக்கப்பட்டது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர், 48 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக உலகெங்கிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற சின்னமான ஈபிள் டவர் விளக்குகள் நேற்றிரவு அணைக்கப்பட்டது.

ஞாயிறு இரவு 12.45 மணிக்கு லண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபிள் டவர் விளக்குகள் அணைக்கப்படும் என ஈபிள் டவர் டுவிட்டர் கணக்கில் முன்னதாகவே கூறப்பட்டது.

42 பேர் கொல்லப்பட்ட பாக்தாத் தாக்குதலுக்கும், 90 பேர் கொல்லப்பட்ட காபூல் தாக்குதலுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக கடந்த வாரத்தில் மட்டும் இருமுறை ஈபிள் டவர் விளக்குகள் அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments