பாரீஸில் வசிப்பவர்களுக்கு நற்செய்தி: வருகிறது சூப்பர் திட்டம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பாரீஸில் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் அதிக போக்குவரத்து காரணமாக வாகனங்களிலிருந்து வெளியேறும் சத்தத்தை குறைக்க நகர அதிகாரிகள் புதிய வழிமுறையை மேற்கொள்ள உள்ளனர்.

பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் உள்ள பல சாலைகள் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்.

வீடுகள் அதிகம் உள்ள பகுதியின் சாலைகளில் இரவு நேரங்களில் வாகனங்கள் அதிகளவு செல்வதால் அந்த சத்தமானது தங்கள் இரவு தூக்கத்தை கெடுப்பதாக பாரீஸ் மக்கள் அடிக்கடி புகார் அளித்து வருகிறார்கள்.

தற்போது இந்த விடயத்துக்கு தீர்வு காண பாரீஸ் நகர அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.

அதன்படி, பாரீஸில் உள்ள மூன்று புதிய சாலைகளின் மேற்பரப்புகளை சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து வாகனங்களால் ஏற்படும் சத்தம் 50 சதவீதம் குறையும் என நம்பப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு மொத்தமாக 2.9 மில்லியன் யூரோ செலவாகும் என தெரிகிறது. இந்த திட்டத்துடன் சேர்த்து வாகனங்களால் ஏற்படும் மாசு மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சமாளிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மேற்பரப்புகளை சரியாக வடிவமைக்கும் பட்சத்தில் வாகனத்திலிருந்து வெளியாகும் மாசுக்களிலிருந்து தப்பி சுத்தமான காற்றை மக்கள் சுவாசிக்க முடியும்.

ஐரோப்பிய ஆணைக் குழுவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால், ஐரோப்பிய ஆயுள் சுற்றுச்சூழல் திட்டத்திலிருந்து பாரீஸ் அதிகாரிகளுக்கு 1.3 மில்லியன் யூரோ நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் பாரீஸில் வசிப்பவர்கள் 22 சதவீதம் பேர் போக்குவரத்தினால் வரும் சத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பாரீஸ் சுற்றுச்சூழல் ஆர்வலர் Celia Blauel கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments