காரில் தப்ப முயன்ற நபரை சுட்டுக்கொன்ற பொலிசார்: வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் காரில் தப்ப முயன்றபோது பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரான பாரீசுக்கு அருகில் உள்ள குடியிருப்பில் இருந்து கடந்த சனிக்கிழமை பொலிசாருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது.

‘சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கத்தியுடன் திரிவதாகவும், அவரிடம் வெடிகுண்டு இருக்க வாய்ப்புள்ளது’ என சிலர் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அப்போது, சந்தேகத்திற்குரிய நபர் காரில் தப்ப முயன்றுள்ளார். ஆனால், பொலிசாரின் வாகனங்களை சுற்றிலும் நிறுத்தி அவரை தப்ப முடியாமல் பொலிசார் மடக்கியுள்ளனர்.

மேலும், வாகனத்தை விட்டு கீழே இறங்க பொலிசார் இட்ட உத்தரவை நபர் பின்பற்றவில்லை எனக்கூறப்படுகிறது.

ஓட்டுனர் இருக்கையில் இருந்த நபரின் கையில் கத்தி இருந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.

சில வினாடிகளுக்கு பின்னர், முன்னோக்கி சென்ற கார் திடீரென பின்னோக்கி சென்று பொலிசாரின் வாகனம் மீது மோதியுள்ளது.

விபரீதத்தை உணர்ந்த 3 பொலிசார் கார் ஓட்டுனர் மீது சரமாரியாக தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஓட்டுனர் ரத்த வெள்ளத்தில் பலியாகியுள்ளார்.

நபரின் குடியிருப்பில் சென்று விசாரணை செய்தபோது பொலிசாரால் கொல்லப்பட்டவர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

கார் ஓட்டுனர் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்