பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட முதல் நிர்வாண பூங்கா

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரான்ஸ் நாட்டில் பொதுமக்கள் நிர்வாணமாக பொழுதை கழிக்க முதல் நிர்வாண பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகரான பாரீஸிக்கு அருகில் உள்ள Bois de Vincennes என்ற பகுதியில் ஒரு கால்பந்து மைதானம் பரப்பளவிற்கு இந்த நிர்வாண பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

advertisement

இந்த வசதியை தொடங்குவதற்கு கோரிக்கைகளை வலிறுத்து வந்த Julien Claude-Penegry என்பவர் பாரீஸ் மேயரை பாராட்டியுள்ளார்.

இதுக் குறித்து அவர் பேசியபோது, ‘இயற்கையுடன் ஒன்றி வாழ விரும்பும் நபர்களுக்கு இந்த நிர்வாண பூங்கா சிறப்புடையதாகும்.

மேலும், இயற்கையை விரும்புவர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த வசதி அமைந்துள்ளது’ என பாராட்டியுள்ளார்.

சில விதிமுறைகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நிர்வாண பூங்கா எதிர்வரும் அக்டோபர் 15 முதல் திறக்கப்பட்டுருக்கும்.

காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை இப்பூங்காவை இயற்கை விரும்பிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், பூங்காவில் நிர்வாணமாக உள்ளபோது பாலியல் உறவு உள்ளிட்ட அத்துமீறிய செயல்களில் யாரும் ஈடுப்படக்கூடாது என பாரீஸ் நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்