பிரான்ஸில் வரவிருக்கும் முக்கிய தடை

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸில் 2040-ஆம் ஆண்டில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி தடைசெய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அந்நாட்டின் சுற்றுசூழல் அமைச்சர் நிக்கோலா ஹலோட் ஆகிய இருவரும் நேற்று அரசு சார்பற்ற அமைப்பு (NGO) நிர்வாகிகளுடன் நாட்டின் காலநிலை மற்றும் சுற்றுசூழல் குறித்து விவாதித்தார்கள்.

கூட்டத்தின் முடிவில் வரும் 2040-ஆம் ஆண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை பிரான்ஸில் தடை செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான மசோதா தயாராகிவிட்ட நிலையில், இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது..

தற்போது பிரான்ஸில் 63 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் உள்ளது.

உலகில் இது போன்ற தடையை பிரான்ஸ் தான் முதன் முதலில் கொண்டு வரபோவதாகவும், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் இந்த தடை சட்டம் வரப்போவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹைட்ராலிக் திட்டத்தின் கீழ் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரியிலிருந்து மின்சாரம் எடுப்பதை பிரான்ஸ் தடை செய்யும் எனவும், 2040-ல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் விற்பனையை நிறுத்துவதே தனது நோக்கம் எனவும் நிக்கோலா முன்னரே கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்