பாரிசில் வெள்ளப்பெருக்கு அபாயம்: மக்களுக்கு அரசு எச்சரிக்கை

Report Print Kabilan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்சின் Seine நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பாரிஸ் நகர மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரிஸில் Seine என்னும் நதியின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 1.6 மீட்டரிலிருந்து 3.2 மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது அடுத்த 72 மணிநேரத்தில் மேலும் உயரும் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக பாரிஸ் நகர மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் Seine நதியின் மீது படகு பயணம் செய்யக் கூடாது எனவும், நதியின் அருகில் குடியிருப்போர் உயர் ரக பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நதியின் அருகில் உள்ள நெடுஞ்சாலைப் பகுதிகள், பாதசாரிகளுக்கான நடைபாதைகள் ஆகியவை வரும் நாட்களில் மூடப்பட வாய்ப்புள்ளதாக காவல் தலைமையகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்