புலம்பெயர்தல் சட்டங்களை கடுமையாக்கும் பிரான்ஸ் ஜனாதிபதியின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

புலம்பெயர்தல் சட்டங்களை கடுமையாக்கும் பிரான்ஸ் ஜனாதிபதியின் முடிவுக்கு அவரது கட்சி உட்பட பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் உதவிக்குழுக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது எல்லைகளைத் திறந்து விடுவதையும், புகலிடம் கோருபவர்களை மனிதாபிமானத்துடன் அணுகுவதையுமே மீண்டும் மீண்டும் கோஷமாக முழங்கிய Emmanuel Macron, தற்போது முற்றிலும் அதற்கு மாறாக நடந்து கொள்கிறார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள Secours Catholique charity என்னும் அறக்கட்டளை இது பின்னோக்கி அடி எடுத்து வைப்பதற்கு சமம் என்று கூறியுள்ளது.

இந்த இறுக்கமான சூழ்நிலையை எளிதாக்குவதற்காக Macron, உதவிக்குழுக்களை சந்தித்து விளக்கமளிக்குமாறு பிரதமர் Edouard Philippeஐ கோரியுள்ளார்.

ஒரு உதவிக்குழு இந்த சந்திப்பைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

உள் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய கொள்கை மாற்றம் ஆயிரக்கணக்கான அகதிகள் அடைக்கலம் புகும் ஹொட்டல்கள் போன்ற இடங்களில் ஆய்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதை அடுத்து பலர் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளதால் உதவிக்குழுக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்