பிரான்ஸ் தூதரகத்தின்மீது தீவிரவாத தாக்குதல்: இருபதுக்கும் அதிகமானோர் பலி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

Burkina Faso நாட்டிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தின்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர்.

தூதரகத்தின்மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்ட அதே நேரத்தில் Burkina Faso நாட்டின் ராணுவ தலைமையகத்தின்மீதும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இவ்விரு தாக்குதல்களிலும் இருபதுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

குண்டு வெடிப்பிற்கு முன் ஆயுதம் ஏந்திய சில தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நிகழ்த்தப்பட்டது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்று Burkina Faso அரசு தெரிவித்துள்ளது.

குண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை பயன்படுத்தி இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

அரசு திட்டமிட்டிருந்த தீவிரவாதத்திற்கெதிரான கூட்டம் ஒன்றை சீர்குலைக்கும் முயற்சியாகவே இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று அரசு கருதுகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தொலைபேசி மூலம் Burkina Fasoவின் அதிபரைத் தொடர்பு கொண்டு தாக்குதலுக்காக கண்டனத்தையும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார்.

இத்தாக்குதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்